Close
பிப்ரவரி 26, 2025 2:49 காலை

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்: கலெக்டர்

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கலெக்டர் உமா பேசினார். அருகில் சங்க தலைவர் அருள்.

அனைவரும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பேசினார்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், லாரித்தொழில் மற்றும் பாடி பில்டிங் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டம். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தில், 5,000 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக அரசு சார்பில், தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு புதிய தொழில் தொடங்க கடன் உதவிகளும், தொழிலாளர் நலவாரியம் மூலம், நலவாரிய அட்டைகள் பதிவு செய்தல், புதுபித்தல், கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிதொகைகள் வழங்கப்படுகிறது.
அதேபோல், ஆட்டோ அல்லது டாக்ஸி, வாகனம் தொழில் மேற்கொள்ள அரசு மானியத்தில் நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால், அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு, அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்க தலைவர் அருள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top