Close
மார்ச் 3, 2025 10:28 மணி

சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறுதானிய கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார்.

சிறு தானிய உணவின் முக்கியத்துவம் குறித்து பொ துமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்துணவு திட்டம், சமூக நலத்துறை இணைந்து சிறுதானிய திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து இவ்விழாவில் திணை, கேழ்வரகு, கம்பு சாமை கொள்ளு, நிலக்கடலை உள்ளிட்ட வகையான சிறு தானியங்களை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வைவிட்டு சிறுதானிய உணவுகளை உட்கொண்டார். மேலும் இதன் பயன்பாடுகள், நன்மைகள் குறித்து பொதுமக்கள் அ றிந்து கொள்ளு ம் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் வேங்கிக்கால் துர்கை நம்மியந்தல் அரசு பள்ளிகள் மற்றும் சிஷ்யா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதா கைகளுடன் பங்கேற்றனர்.

இந்திகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், திட்ட இயக்குதர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளாச்சி) கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வடிவேலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மீனாம்பிகை, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சரண்யா மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top