Close
மார்ச் 4, 2025 11:36 காலை

விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கல இசையாக நாதஸ்வர குழுவினர் இசைத்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முன்னாள் மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் வாலகுருநாதன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உப தலைவர் சுவாமி நியமனந்த, விவேகானந்த கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆசி உரை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.
முன்னாள் மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பெருந்திரள் கூடலின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். மகேந்திரன் அறிமுகவுரை ஆற்றினார்.

விவேகானந்தர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலர் முனைவர் தீனதயாளன் தொடக்கவுரை ஆற்றினார்.

விவேகானந்த கல்லூரியின் மேனாள் முதல்வர்கள் இராமமூர்த்தி, முனைவர் இராமமூர்த்தி, முனைவர் ராஜா, மற்றும் மேனாள் முதல்வர்கள் துணை முதல்வர்கள் முனைவர் இளங்கோ மற்றும் பேராசிரியர் ஜெயபாலன், கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் ராஜேந்திரன், முனைவர் சிவசுப்பிரமணியன், முனைவர் கணேசன், முனைவர் ராஜேந்திரன், முனைவர் ஜெயக்குமார், முனைவர் லட்சுமணன் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் மேனாள் பேராசிரியர்கள் மயில்வேல், ராமலிங்கம், ராஜாராம், செல்வராஜா, முனைவர் நாட்டுத்துறை, முனைவர் வெங்கடசுப்பு, முனைவர் காளியப்பன், முனைவர் லட்சுமணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தேனி மண்டல முன்னாள் மாணவர்களுடன் உரையாடினர்.

தேனி மண்டல விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் பணிபுரியும் வருகை பேராசிரியர் முனைவர் வெங்கடேஸ்வரன், பல்துறை ஆளுமை விருது வழங்கப்பட்டது.

விவேகானந்த கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் சுப்பிரமணியம், மேனாள் சமஸ்கிருதத்துறை தலைவர் பேராசிரியர் அனந்தராமன் மற்றும் தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு காவல்துறை துறை தலைவர் திருநாவுக்கரசு வாழ்த்துரை ஒலி ஒளி பதிவுகளாக ஒளிபரப்பப்பட்டது.

மேலும் , கல்லூரியின் தேனி மண்டல முன்னாள் மாணவர்களான மதுரை மாவட்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் , தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் சரவணகுமார், திருநெல்வேலி நுண்ணறிவு பிரிவு காவல் துறை உதவி ஆணையர் மாரிச்சாமி, பெங்களூர் இந்திய விண் இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் கதிரவன், சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் ஆடிட்டர் சங்கர், சங்கத்தின் பொருளாளர் முனைவர் பட்டினத்தார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சங்கத்தின் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர்கள் லோகநாதன் மற்றும் சுரேஷ் கண்ணன், துணைச் செயலர்கள் சாய் சுகுமாரன், துணைப் பொருளாளர்கள் செந்தில்வேலன் மற்றும் ராஜா, தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், நாகராஜன், கருப்பையா, குமரேசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

கல்லூரியின் முன்னாள் மாணவர்களான விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் இசை ஆசிரியர் மணிகண்டன் பெங்களூர் கிருஷ்ணன் மதுரை முனைவர் சூ.கணேசன், போடி மணிகண்டன் பெரியகுளம் வெங்கட்ராமன் ஆகியோர் பிற்பகல் அமர்வில் இசை நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்வில் சங்கத்தின் துணைத் தலைவர் சுரேஷ் கண்ணன் சங்கத்தின் புதிய இணையதளம் உருவாக்குவதற்கு ரூபாய் ஒரு லட்சம் தனது பங்களிப்பு தொகையாக வழங்கினார்.

மேலும், விவேகானந்த கல்லூரி தேனி மண்டல பெருந்திரள் சந்திப்பு  உணவு செலவினங்களுக்காக முன்னாள் மாணவர்களான மணிகண்டன், கார்த்திகேயன், வெங்கட் ராகவன், கதிரவன், எஸ். கோபிநாத், ஜெயபிரகாஷ், டி. சசிகுமார் மற்றும் 1993-1996 நண்பர்கள் தங்கள் பங்கு தொகையாக ரூபாய் 1,00,000( ஒரு லட்சம்) வழங்கினர்.

விவேகானந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட பங்களிப்பு தொகை செலுத்திய பெருந்தகைகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, உதவியாக இருந்து செயல்பட்ட விவேகானந்த கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர் அருள்மாறன் கார்த்திகேயன், முனைவர் ஏல்லைராஜா, கோபிநாத், முனைவர் மோகன்ராஜ், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

முழு நிகழ்ச்சியும் துவக்க முதல் இறுதி வரை யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பப்பட்டது. சங்கத்தின் துணை செயலர் முனைவர் கோபி நன்றி உரையாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top