Close
ஏப்ரல் 4, 2025 6:46 காலை

திமுக சார்பில் கோடைக்கு உதவ நீர்மோர் பந்தல்..!

நீர்மோர் பந்தல் திறப்பு

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக கோடை வெயில் தாக்கத்தால் அவதிப்படும் பொது மக்களின் நலன் கருதி தாகம் தணிக்க கோடை கால மோர் பந்தல் வாடிப்பட்டி பஸ் நிலையம் மற்றும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்பாக திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் பேரூர் அவைத்தலைவர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர்செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் தி.மு.க நிர்வாகிகள் ராம் மோகன், மருதுபாண்டி, எம். எஸ்.முரளி, அரவிந்தன், வினோத், ஜெயபிரகாஷ், ராஜசேகர், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top