அரசு அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகவும் வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பு , வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் 1.1. 2025 முதல் 2% சதவீத அகவிலைப்படியை வழங்கியதற்கும், 1.10. 2025 முதல் ஒப்படைப்பு விடுப்பு (சரண்டர்) வழங்கியதற்கும், பண்டிகை கால முன்பணமாக ரூ. 10,000 த்திலிருந்து ரூ.20,000 ஆக வழங்கியதற்கும் ,கல்வி முன் பணமாக தொழிற்கல்விக்கு ஒரு லட்சமாகவும், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்விக்கு ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கும், அரசு அலுவலர் இல்ல திருமணம் முன்பணமாக ரூபாய் 5 லட்சம் ஆக உயர்த்தி வழங்கியதற்கும் , ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 500 லிருந்து ஆயிரமாக வழங்கியதற்கும், ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூபாய் 4000 இருந்து 6000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் மேலும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருமாறு , மகேந்திரகுமார் மாநிலத் தலைவர் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர், வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.