Close
மே 25, 2025 9:42 மணி

கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மோகனூர் அருகே கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது, மின்சாரம் பாய்ந்து, ஜார்கண்ட் மாநில கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், மகாராஜ்கஞ்ச்சை சேர்ந்தவர் அப்துல்மதீன் காஜீ (46). அவர், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த பெரமாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில், கடந்து 5 மாதங்களாக, கட்டிட மேஸ்திரி வேலையில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு திருமணமாகி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை, 7 மணிக்கு, ஹருன் அன்சாரி மற்றும் அப்துல் மதீன் காஜீ, மெசின் ஆபரேட்டர் குணசேகரன் உள்ளிட்ட 8 பேர், கட்டிடத்தில் கான்கிரீட் போடும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கான்கிரீட் கலவை மிஷினை தள்ளி சென்றபோது, மிஷினில் இருந்த வயர் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி பழுதடைந்திருந்தது.

இந்நிலையில், அப்துல் மதீன் காஜீ, 10 அடி உயரத்தில் கட்டிடத்தின் நடைபாதை மேல் நின்று கொண்டு, கான்கிரீட் கலவையை கொட்டிக்கொண்டிருந்தார். அப்போது, பழுடைந்த ஒயர் மிஷின் மீது பட்டு அப்துல் மதீன் காஜீ மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மயங்கி விழுந்த அப்துல் மதீன் காஜீயை, சக பணியாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top