Close
மே 29, 2025 8:37 காலை

நாமக்கல்லில் திலோப்பியா மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வரும், 29ம் தேதி, திலோப்பியா மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய (கேவிகே) தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 29ம், தேதி காலை, 10 மணிக்கு, திலோப்பியா மீன் வளர்ப்பு என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில், மீன் பண்ணைக்குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைத்தல், மீன்குஞ்சு தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், மாநில, மத்திய அரசின் மீன் வளர்ப்புக்குறிய மான்யம் குறித்தும் விளக்கப்படும்.

மேலும், மீன் வளர்ப்பு துறை அதிகாரிகள் இப்பயிற்சியன்று வருகை தருவதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மீன் பண்ணையாளர்கள் மீன்குட்டையை பதிவு செய்யாத விவசாயிகள், தேவையான விபரங்கள் கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்ளது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top