Close
ஜூன் 8, 2025 1:31 காலை

பெண்களின் வீட்டு வேலைகளை சுலபமாக்க வந்தாச்சு ரோபோ..! மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு..!

மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ரோபோ

தமிழகத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவன குழுமங்களின் ஒன்றான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு கல்வி பிரிவுகளின் கீழ் பல ஆயிரக்கணக்கான மாணவ , மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

அவ்வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் தங்களுடைய செயல்முறை பயிற்சியின் கீழ் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

 

இதற்காக ஊட்டி சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து சுமார் நான்கடி உயரம் உள்ள ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டளையிட்டால் கட்டளைக்கு ஏற்ப திறம்பட செயல்படுவது குறித்த விளக்கப் பயிற்சி இன்று பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் ஆன்மீக செம்மல் கோ.ப. செந்தில்குமார் கலந்து கொண்டு, ரோபோ செயல்பாட்டினை பேராசிரியர்கள் மாணவர்கள் அவருக்கு விளக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்போது உலகமெங்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோபோவின் பணி அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெண்களின் குடும்ப வேலைகளை எளிதாக்கிடும் வகையில் இந்த ரோபோ உருவாக்கும் எண்ணம் மாணவ, மாணவியர்களுக்கு வந்துள்ளது.

அதன் அடிப்படையில் நீலகிரியில் அமைந்துள்ள லாம்ஸ் ஆட்டோமிஷன் தொழில்நுட்ப ஆலோசனையுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கடி உயரம் உள்ள இந்த ரோபோ சோலார் மின் சேமிப்பு மூலமும் இயங்க கூடியது என்பது சிறப்பு அம்சமாகும்.

வீடுகளை தூய்மை செய்தல், சுமார் 3 கிலோ எடையுள்ள பொருட்களை கையில் எடுத்து செல்லும் வகையிலும், 360 டிகிரி சுழலும் நிலையிலும் இதன் செயல்பாடு உள்ளதால் அனைவருக்கும் இந்த ரோபோ வடிவமைப்பு விருப்பமாக இருக்கும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரத்தினை வலியுறுத்தும் நிலையில் , வீட்டினை சுத்தம் செய்தல் பொருட்களை எடுத்து செல்லுதல் என பல வகைகளில் இவள் பயன்பாடு இருப்பதாலேயே இதற்கு பெண்பாலில் தாரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் , பெண்களை போற்றும் என இரு வேறு காரணங்களை இதற்காக தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top