Close
ஜூன் 15, 2025 12:40 காலை

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..!

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் :
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், வருகிற 20ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தனியார்துறை நிறுவனங்களும்-தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வருகின்ற 20ம் தேதி காலை 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது. தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்றபணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்கள், 12-ம் வகுப்பு, டிப்பளமோ, பட்டப்பட்டி, ஐடிஐ பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலையளிப்போரும், வேலை நாடுநர்களும் டிஎன்பிரைவேட்ஜாப்ஸ்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் பதிவு செய்திட வேண்டும். முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top