Close
நவம்பர் 22, 2024 5:58 மணி

புதுகை நகராட்சி 18 வது வார்டு திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ முத்துராஜா நூதன பிரசாரம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 18 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்த புதுகை எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  18 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும்  கவிதா சரவணன் வீடு வீடாகச்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரை ஆதரித்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வித்யாசமான முறையில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில்   187 இடங்களுக்கு பிப்.19 -இல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி 18 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் கவிதாசரவணனுக்கு ஆதரவாக  பிரசார களமிரங்கிய புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா,    ஆட்டோ ஓட்டிச்சென்றும்,  நடமாடும் சலவை நிலையத்தில் துணிகளை இஸ்திரி செய்து கொடுத்தும் நூதன  முறையில் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதைத்தொடந்து வேட்பாளர் கவிதா சரவணன்  தனது வார்டுக்குள்பட்ட  பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று  வாக்கு சேகரித்தார். இவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகளும் தொண்டர்களும் இணைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top