புதுக்கோட்டை நகராட்சியின் 9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு மனைவி செந்தாமரை தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
புதுக்கோட்டை நகராட்சி 9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு மனைவி செந்தாமரை 9 -வது வார்டுக்குள்பட்ட செல்லப்பா நகர் முழுவதும் வீடு வீடாகச்சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். இவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மகளிரணி தொண்டர்களும் இணைந்து வாக்கு சேகரித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 187 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தேர்தல் பிப் 19 –ஆம் தேதி நடைபெறவுள்ளது.