Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: பொன்னமராவதியில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்கமோதிரம் பரிசு

பொன்னமராவதி

பொன்னமராவதி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசளித்த சட்ட அமைச்சர் ரகுபதி

பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்பு.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 பிறந்த நாள் விழா  நலத்திட்ட உதவி, இனிப்பு, தங்கமோதிரம் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேரறிஞர் அண்ணா  உருவச்சிசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.மேலும் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 1ஆம் தேதியன்று பிறந்த குழந்தைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தங்க மோதிரம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதேபோன்று தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி வலையபட்டி அடைக்கன் ஊரணி அருகே சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மரக்கன்று நட்டு வைத்தார்.

இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர செயலாளர் அழகப்பன் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக,  ஒன்றியப்பெருந்தலைவர் சுதாஅடைக்கலமணி தலைமையில் நகரச் செயலாளர் அழகப்பன் முன்னிலையில், வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (எ)அமரகண்டான் மருத்துவமனைகளில் உள்ள  உள் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு பிரட், இனிப்புகளை வழங்கி முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் ஒன்றிய, நகர,கிளை, இளைஞரணி,வலைத்தள பிரிவு மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top