மறைந்த திமுக முன்னாள் அமைச்சரும் பொதுச்செயலரு மான க. அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திராவிட இயக்கத்தின் கொள்கை வழிகாட்டியும் இனமான பேராசிரியர் என்றழைக்கப்பட்ட க. அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவரது உருவப்படத்துக்கு தமிழக சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி வடக்கு மாவட்ட பொருப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் , எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..