Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

ஈரோடு பிரஸ் கிளப்: புதிய நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு

ஈரோடு பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள்

ஈரோடு பிரஸ் கிளப் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள கடோத்கஜா ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சன்.டிவி செய்தியாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,  பிடிஐ.செய்தியாளர் சுந்தரம் சங்க ஆலோசகராகவும், சங்கத்தலைவராக முரசொலி நிருபர் பி.எம். சம்பத்,  மாலை  செயலாளராக தமிழகம் நிருபர் ஆர்.பி. மோகன்,  பொருளாளராக ஜெயா டிவி புகைப்படக்கலைஞர் முகமது யாசின்,  இணைச் செயலாளராக சன் டிவி செய்தியாளர் குணசேகரன்.

அமைப்புச் செயலாளராக தந்தி தொலைக்காட்சி நிருபர் மக்பூல் அகமதும்,  செய்தி தொடர்பாளராக இமயம் டிவி செய்தியாளர் லோகநாதன், துணைத் தலைவர்களாக தினபூமி செய்தியாளர் பரஞ்சோதி, விண் டிவி செய்தியாளர் வேணுகோபால்.

துணை செயலாளர்களாக நியூஸ் 7 செய்தியாளர் கே.இளங்கோவன், மதுரை மணி செய்தியாளர் சாகுல் ஹமீது, மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக பெ.ர.பாலு, பவானந்தன், ராஜேந்திரன், மோகன சுந்தரம், ஸ்ரீதர், சாகுல் ஹமீது ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top