Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்-பள்ளிகள் திறப்பு எப்போது? -பள்ளிக்கல்வித்துறை தகவல்

பள்ளிகள்

பள்ளிகளுக்கு விடுமுறை விவரம்

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது? -பள்ளிக்கல்வித்துறை தகவல்.

12-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.அதே போல் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரையும் 10-ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30 -ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.

இது தவிர 6 முதல் 9 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13 -ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1 முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 -ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

11 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ஆம்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது. இதை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top