Close
நவம்பர் 24, 2024 9:35 காலை

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் பொது மருத்துவ முகாம்

பொன்னமராவதி

வேகுப்பட்டி ஊராட்சியில் சுகம் மருத்துவமனை,பொன்னமராவதி வட்டார வயலக கூட்டமைப்பு இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் சுகம் மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி வட்டார வயலக கூட்டமைப்பு இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.

வேகுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முத்து முன்னிலை வகித்தார்.

டாக்டர் ஹரிஸ் தலைமையிலான குழுவினர் பொது மக்களுக்கு உடல் வெப்ப நிலை, சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரையை வழங்கினர்.இதில் வார்டு உறுப்பினர்கள் செல்வி சண்முகம், கணேசன், அழகி, தேன்மொழி குமார், ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top