750 நாள்களாக மேற்கொண்டு வந்த கொரோனா தடுப்பு களப்பணியை திண்டுக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிறைவு செய்தார்.
கொரானா நோய்தொற்று பரவலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் நோய்தொற்று பாதிப்பினால் எண்ணற்ற உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டது.
மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் தூய்மை காவலர்கள் என பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் களமிறங்கி மனிதநேயத்துடன் சேவையாற்றி வந்தனர்.
திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பால் தாமஸ் மற்றும் சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் ஒன்றுகூடி நோய்த் தொற்றுக்கு எதிராக களப்பணி ஆற்றி வரும் உன் களப் பணியாளர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்குதல் போன்ற பணிகளில் தன்னார்வமாக ஈடுபட்டு செயல்பட்டு வந்தனர்.
இப்பணிகள் தன்னார்வலர்கள் ஜேம்ஸ் மில்டன்,சகாய பிரபாகர், ஜோ பிராங்கிளின், சக்திவேல் மற்றும் பல சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் தன்னார்வத்துடன் சமூக ஆர்வலர் பால் தாமஸ் அவர்களுடன் இணைந்து களப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பு சமூக ஆர்வலர்கள் அமைப்பினர் நோய்த்தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தொடங்கினர்.
தன்னார்வலர் பால் தாமஸ் தொடர்ந்து தனது களப்பணியை ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு செய்யப்படும் வரை தனது பணியை தொடர வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.
மக்கள் நலப் பணியாளர்கள் என காவல் துறை சுகாதாரத் துறை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தூய்மை காவலர்கள் உடன் இணைந்து பொதுமக்களுக்கு கவசம் வழங்கி கொரானா நோய்த்தொற்று பற்றிய தொடர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வந்தார்.
அத்துடன் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், பள்ளி இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், போக்குவரத்து காவல்துறையின் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மது போதை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள தூய்மை காவலர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணம் வழங்கி உதவுதல்.
ரயில்வே பாதுகாப்பு உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டங்களை காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தமது சொந்த செலவில் தன்னை ஈடுபடுத்தி தொடர்ந்து களப்பணி ஆற்றி வந்தார்.
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தாம் பயணிக்கும் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் பணியாற்றும் அதிகாரிகள் இடத்தில் மரக்கன்றுகளை வழங்குதல் மற்றும் நடும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 750 நாட்களில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கி நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறாக எண்ணற்ற சமூகப்பணிகள் ஆற்றியுள்ளது குறித்து பல்வேறு காவல் துறை உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என அனைவரும் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக அரசு நோய்தொற்று பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகள் ஆன கட்டாய முகக்கவசம் அணிதல், கட்டாய தடுப்பூசி ஆகியவற்றை இலிருந்து விலக்கு அளித்து தளர்வு ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தன்னார்வலர் தாமஸ் நோய்தொற்று பரவலுக்கு எதிரான தனது தொடர்புகளை பணியினை நிறைவு செய்யும் விதமாக, திண்டுக்கல் மாவட்ட ரயில் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில், ரயில் நிலையத்தில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கும் ஏழ்மைநிலையில் உள்ள முடிதிருத்துவோருக்கும் உதவும் விதமாக 5 கிலோ அரிசி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் ரயில்நிலைய பணியாளர்களுக்கும் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் தன்னார்வலர்களுடைய தொடர் களப்பணி பாராட்டுக்குரியது என்றும் அவர்கள் தொடர்ந்து திறம்பட செயல்பட தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
நிறைவாக காவல்துறையினர் தூய்மை காவலர்கள் சுகாதாரத்துறையினர் என அனைவருக்கும் அவர்களின் பணியை அர்ப்பணிப்பு தியாகத்தைப் போற்றும் விதமாக மெழுகுவர்த்தி வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், ரயில்வே பாதுகாப்பு படை கூடுதல்உதவி ஆய்வாளர்,செய்யத் ஜெயினுலாபுதீன், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் விசுவாசம் , இருப்புப்பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சதீஷ், ஜி டி என் கல்லூரிப் பேராசிரியர் முருகானந்தம்
ஆகியோர் கலந்துகொண்டு தன்னார்வலர்கள் பணிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.