Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

தமிழக திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பூஜை முறைகள், ஆகமங்கள் தொடர்பாக ஆய்வு

இந்து சமய அறநிலையத்துறை

வேலூர் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறையின் உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர் திருமிகு.சத்தியவேல்முருகனார் அவர்கள் ஆய்வு செய்தார்

தமிழக திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பூஜை முறைகள், ஆகமங்கள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல்முருகனார்  ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலையத் துறையின் உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல்முருகனார்  வேலூர் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்கபந்தீஸ்வரர் திருக்கோயில் முதலிய கோயில்களில் ஆகம பூஜை முறைகளையும் சுவாமி சந்நிதிகள் ஆகம முறைப்படி அமையப் பெற்றுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

ஜலகண்டேஸ்வரர் கோயில் நிர்வாகி திரு.சுரேஷ், அர்ச்சகர் திரு.பாஸ்கர சிவாச்சாரியார், வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top