பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப்பின்னர் நடிகர் விஜய் அளித்த நேர்காணல் நிகழ்வில், அவரை பேட்டி கண்ட பீஸ்ட் திரைப்பட இயக்குநர் நெல்சனின் கேள்விக்கு பதிலளித்த போது, புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைபட்டியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் புகழேந்தி உயிரிழந்த சம்பவம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை தளபதி விஜய் மக்கள் இயக்க சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், புதுக்கோட்டை மாவட்டத் தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான ஜெ. பர்வேஸ் நேரில் சந்தித்து ரூ. 25,000 நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இதில், மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.