மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது சிறப்புரையாற்றியது டன் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய பயிற்சி கையேட்டினை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பி.பொன்னையா ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில் உள்பட திரளானோர் கலந்து கொண்டார்.