தமிழுக்கு வாழ்த்துகள்…
அன்னை கொடுத்த
தமிழ்
அமிழ்து நீ
என்
அகத்தில் பதிந்த
விழுது நீ
மனம் விரும்பும்
மகிழ்வு நீ
மணம் கமழும்
இசையும் நீ!
உலகம் தோன்றிய பொழுதே
உன்
உரு வும் தோன்றியது
உதடுகள் உச்சரிக்க
உன்
ஒலிகள் தோன்றியது
இதை……
உறைந்து கிடக்கும்
உண்மைகள்
உலகிற்கு கூறியது!
வள்ளுவனாய்
பிறந்த தமிழ்
வாழும் முறை சொன்னது
வாலியாய் வளர்ந்த தமிழ்
வண்ண கவிகள் தந்தது
கம்பனின் உருவில் வந்து
காவிய மொழியானது
கண்ணகி புகழ்பாட
கால் சிலம்பு நீதி யானது
இயல் வடிவான
தமிழ்
இசை வடிவானது
நாடக வடிவான
தமிழ்……
நாட்டிய வடிவானது
கணனி வடிவான தமிழ்
என்
கற்பனை வடிவானது
காலம்
புகழ் பாடுது!
தமிழே!!
தாயே
வாழ்த்துக்கள்
என்
தாழ்பணிந்த
வணக்கங்கள்..
மருத்துவர் மு.பெரியசாமி,
புதுக்கோட்டை