Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அம்பேத்கர்

அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில்  சட்ட அமைச்சர் எஸ் ரகுபதி மற்றும் அமைச்சர் பொன்முடி,மக்களவை உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன் (விசிக), ஆ. ராசா(திமுக)  மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top