Close
நவம்பர் 22, 2024 12:15 காலை

புதுக்கோட்டையில்  தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

புதுக்கோட்டையில்  தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.                                                                                                                                                                                                புதுக்கோட்டையில்தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுகூட்டம் மாவட்ட அறிவியல் இயக்க  அலுவலகத்தில் 02.05.2022 அன்று  நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்   கே .சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் எஸ் . அம்பிகாபதி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தமிழக சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் தீர்மான நகலை மாவட்ட நிர்வாகிகள் வெளியிட திருவரங்குளம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:                            சத்துணவு  ஊழியர்களின்  ஊழியர்களின்  ஊழியர்களின் கோரிக்கையான காலமுறை ஊதியம்,  ஓய்வூதியம் உயர்த்துதல்,  பணி ஓய்வின்   போது ஒட்டு மொத்த தொகையை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் நடப்புக் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்.    சத்துணவு ஊழியர்களின் காலி பணி இடங்களை  நிரப்பிட துரித நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் செயல்பாடு இன்மையால் சத்துணவு ஊழியர்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் (ஊரகவளர்ச்சி)நேர்முக உதவியாளர் பிஏபிடி மனு அளித்து வலியுறுத்தப்பட்டது.  ஆனால் இதுவரை அவர் மாற்றி அமைக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர்  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வூதியம் ஒட்டு மொத்த தொகை ரூ. 1 லட்சம்  உள்ளிட்ட நிதி ஆதாரங்களை தமிழக அரசிடம் பெற்று வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நேர்முக உதவியாளர் (சத்துணவு)  நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
துணைத்தலைவர் ஆர் செல்லக்கண்ணு நன்றி கூறினார். இதில் ஆர்.கல்யாணசுந்தரம் வி.ராஜேந்திரன், லீலாவதி, ஈஸ்வரி, சத்தியபாமா உட்பட அனைத்து ஒன்றிய நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top