Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புதுக்கோட்டை கட்டிடப்பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் விருது பெற்ற மேலப்பட்டி பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன்

புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்தது)  2022 – 2023 ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பணி ஏற்பு விழா புதுக்கோட்டை விஜய் திருமண மஹாலில்  நடைபெற்றது.

இதில். பொறியாளர்  கண்ணன் தலைவராகவும், பொறியாளர் சரவணன்  செயலாளராகவும், பொறியாளர்  ராஜு பொருளாளராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர் .

 விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக கல்வி சேவை புரிந்தமைக்காக மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மகேஸ்வரன், கறம்பக்குடி பட்டதாரி ஆசிரியர் அனிதா ஆகியோருக்கு கல்விச் சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.புதுக்கோட்டை மரம் நண்பர்கள் குழுவுக்கும் விருது வழங்கப்பட்டது.

விழாவில், திலகவதியார் திருவருள் ஆதினம் தவத்திரு தயானந்தசந்திரசேகரன், மாநில மண்டல நிர்வாகிகள் மற்றும் பொறியாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top