Close
நவம்பர் 22, 2024 12:57 மணி

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

தமிழ்நாடு

மதுரை மாநகராட்சி யில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்

மதுரை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னதாக   மாநகராட்சி பட்ஜெட் கூட்டமானது மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில் ஆணையாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக  பத்திரிக்கையாளர்களை திமுகவை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து, பத்திரிக்கையாளர்கள் மேயரை அறைவாயிலில் திரண்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்துக்கு மதுரையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பத்திரிகைகள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட  சம்பவத்துக்கு  தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் தாக்கலுக்கான கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற மதுரை பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மாமன்றத்திற்கு சற்றும் தொடர்பில்லாத நபர்களால், குறிப்பாக திமுகவைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டனர்.

மாமன்ற அவையில் அதிமுக உறுப்பினர்களுக்கு சீட் ஒதுக்கீடு குறித்து, அக்கட்சியினர் மேயரிடம் முறையிடச் சென்ற செய்தியை சேகரிக்கச் சென்றவர்களுக்கு ஆளும் திமுகவைச் சேர்ந்த சில நபர்களால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர்.

மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் ஜனநாயகத்தை நம்பும் கட்சிகளும் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்களைத் தாக்கிய நபர்கள் மீது திமுக உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், மாமன்ற அவைக்குத் தொடர்பில்லாத நபர்களின் தேவையற்ற தலையீட்டை உடனடியாகத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டுமாய் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அதேபோன்று, மாமன்ற அவைக் கூட்ட நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதற்கான பத்திரிகையாளர்களின் கடமையை முறையாக ஆற்றுவதற்கும் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் வழிவகை செய்ய வேண்டும் எனவும் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top