புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 19.05.2022 அன்று அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்.
அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட் சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 19.05.2022 அன்று காலை 10.30 மணிக்கு அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அறந்தாங்கி வருவாய் கோட்டத்தைச் சார்ந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.