இந்து சமய அறநிலையத்துறையின் புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையராக தி. அனிதா (19.5.2022) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகள் உதவி ஆணையராகப் பணியாற்றி வந்த இவர், அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டையில் உதவி ஆணையராகப் பொறுப்பேற் றுள்ளார்.
இவர் திண்டுக்கல்லில் பணியாற்றிய போது தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 150 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்தார். மேலும், இவர் கடந்த 2010 -ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கோயிலில் நிர்வாக நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு, அலுவலக ஊழியர்கள் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.