Close
நவம்பர் 22, 2024 11:29 காலை

ஜூன் 8 -ல் புதுக்கோட்டைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை: விழா ஏற்பாடுகள் தீவிரம்

புதுக்கோட்டை

முதலமைச்சர் ஜூன் 8 -ல் புதுக்கோட்டைக்கு வருவதையொட்டி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா அரங்குக்கான கால்கோள் விழா

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 08.06.2022 -ல்  முதலமைச்சர் ஸ்டாலின்  வருகையினையொட்டி விழா ஏற்பாடுகள்  தொடங்கியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள,
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மேடை, பந்தல் அமைக்கும் பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்   கால்கோள் நடும் நிகழ்வினை மாவட்ட  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி  வைத்தனர்.
.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த. ஜெயலட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.சு.கவிதைப்பித்தன், உதயம் சண்முகம்.

நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் த.சந்திரசேகரன், க.நைனாமுகமது, அரு.வீரமணி, செய்தி தொடர்பாளர் பி.டி.குமார், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பாஸ்கர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top