Close
செப்டம்பர் 20, 2024 5:33 காலை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 27-ம் ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு  கல்லூரி மைதானத்தில்  தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரியின் தலைவர் ஆர்.ஏ.குமாரசாமி, செயலாளர் பி.கருப்பையா மற்றும் பொருளாளர் ஆர்.வீ.கதிரேசன் ஆகியோர்   விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று ஒலிம்பிக் ஜோதியை  ஏற்றி  போட்டியினை தொடக்கி வைத்தனர்.

 இதையடுத்து பிற்பகலில்  நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியின் தாளாளர்  என்.கனகராஜ்  கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

 விழாவில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை மின்னியல் துறை மூன்றாமாண்டு மாணவர் ஜெரால்டு பெற்றார். தடகளப் போட்டி மற்றும் குழு போட்டி ஆகியவற்றில் 67 புள்ளிகள் பெற்று கிரின் ஹவுஸ்  அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top