Close
நவம்பர் 22, 2024 8:50 காலை

புதுக்கோட்டைக்கு ஜூன் 8 ல் முதல்வர் வருகை: விழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை

முதலமைச்சர் 08.06.2022 புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி, விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அ.சரவணசுந்தர் ஆலோசனை மேற்கொண்டனர்

தமிழ்நாடு முதலமைச்சர்   08.06.2022  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி, விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அ.சரவணசுந்தர் (05.06.2022)  ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், விழாவிற்கு வருகை தரும் பயனாளி கள், இருக்கைகள், குடிநீர்வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர் கள் இருக்கைகள், விழா மேடை மற்றும் பந்தலில் அமருபவர் களின் இருக்கை வசதிகள், மருத்துவக்குழு மற்றும் விழாவிற்கு தேவையான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  ஆலோசனை மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, செயற்பொறியாளர் (கட்டடம்) வி.சுகுமாரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், உதவிப் பொறியாளர் பாஸ்கர், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் கபிரியல் சார்லஸ், வட்டாட்சியர் தமிழ்மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top