Close
செப்டம்பர் 20, 2024 5:26 காலை

பொன்னமராவதி லயன்ஸ் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை

பொன்னமராவதி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

பொன்னமராவதி லயன்ஸ் சங்கத்தின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பொன்னமராவதி அரிமா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆர்.ஆர்.கண்ணன் தலைமை வகித்தார்.  லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மலர்விழி நாகராஜன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி   விழாவை தொடக்கி வைத்தனர்.

விழாவில் பொன்னமராவதி லயன்ஸ் சங்கத்தின் 2022-2023 -ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜன்,செயலாளர் பெரியசாமி, பொருளாளர் சதாசிவம் ஆகியோருக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆர்.ஆர்.கண்ணன் பதவிப்பிரமாணம் செய்துவைத்து வாழ்த்தினர்.

இப்பதவி ஏற்பு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் லயன் சங்கத்தினர், ஷைன் லயன் சங்கத்தினர், ராயல் சங்கத்தினர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top