Close
செப்டம்பர் 20, 2024 6:28 காலை

ஈரோட்டில் ஜூலை 9 -ல் சித்ஸ்ரீராம் இன்னிசை நிகழ்ச்சி

ஈரோடு

ஈரோட்டில் ஜூலை 9 சித்ஸ்ரீராம் இன்னிசை நிகழ்ச்சி

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் இன்னிசை நிகழ்ச்சி ஈரோடு டெக்ஸ்வேலி அரங்கில் ஜூலை 9-ஆம் தேதி  நடைபெறுகிறது.

இது தொடர்பாக  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தீபக் மற்றும் அருண் ஆகியோர் கூறியதாவது: பாடகர்  சித்ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

இதைத்தவிர ஆங்கிலம் மற்றும் தமிழில் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இளைஞர்களை மிகவும் கவர்ந்தது இவரது பாடல்கள் ஈரோடு மக்கள் நேரடியாக இவரது இசையை கேட்டு ரசிக்கும் வகையில்  இந்த இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் புக்மைக்ஷோ ஆன் லைன் தளத்திலும் டெக்ஸ்வேலி சுப்ரீம் மொபைல், வசந்த் அண்ட் கோ, ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் போன்ற இடங்களிலும் கிடைக்கும் மேலும் விவரங்களுக்கு 99444 00085, 70100 19304, தொடர்பு கொள்ளலாம்  என்று தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top