Close
செப்டம்பர் 20, 2024 9:23 காலை

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தல்: திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை  மாவட்ட ஊராட்சிக்குழு 7 -ஆவது வார்டுக்கான  இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.க ராமகிருஷ்ணனை  ஆதரித்து அண்டகுளம் பகுதியில்  நடந்த  தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர்  எஸ். ரகுபதி பங்கேற்று  வாக்கு சேகரித்து பிரசாரம்  செய்தார்.

இதில், வடக்கு மாவட்ட செயலாளர்  கே.கே. செல்லபாண்டியன்,  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா , கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு  உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top