புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா வரும் 15 -ஆம் தேதியிலிருந்து 24 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை யொட்டி வைரம்ஸ் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, கம்பராமாயண ஒப்பித்தல் போட்டி, ஒவியப்போட்டிகள் நடைபெற்றது. இதில், 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 50 பேராசிரியர் நடுவர்களாக பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர் எஸ் .ராமச்சந்திரன் வழங்கி வாழத்தினார்.
நிகழ்வில் செயலாளர் ரா.சம்பத்குமார், நிர்வாகிகள் கோவிந்தராஜன், ச.பாரதி, பேராசிரியர் எம்.கருப்பையா , பேராசிரியர் அய்யாவு, வழக்கறிஞர் செந்தில்குமார், ராமசாமி, கல்வியாளர் த. ரவிச்சந்திரன் , காசிநாதன், குமார், பிருந்தா, அனுராதா, வள்ளியம்மை, வைரம்ஸ் பள்ளி முதல்வர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கம்பன் பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.