புதுக்கோட்டை ஆஞ்சநேயர்கோயிலில் அனுமன் திருச் சபையினர் சார்பில்ஆடிஅம்மாவசை யை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஆடி அம்மாவசை வழிபாடு நடைபெற்றது.
கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது .
சிவாச்சாரியார் கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது . வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியை வழிபட்டனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது .ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிகநெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.