திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில குத்துச்சண்டை போட்டியில் 17 தங்கப்பதக்கம் 16 வெள்ளிப் பதக்கம் 18 வெண்கல பதக்கம் வென்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர்.
இப் போட்டியில் தமிழக முதல் முழுவதிலிருந்தும் 700க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
வெற்றி பெற்ற வீரர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட குத்து சண்டை கழக தலைவர் எஸ்விஎஸ்.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சேது கார்த்திகேயன், துணைத் தலைவர் மாருதி.மோகன்ராஜ், துணைச் செயலாளர் தங்கராஜ், ஆகியோர் வாழ்த்து கூறினார்