Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மூத்த மருத்துவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கும் விழா

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மூத்த மருத்துவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கும் விழா  நடைபெற்றது
புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மருத்துவர் தின கொண்டாட்டம்,   டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் மற்றும்  மூத்த மருத்துவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும்    விழா இளா ரிசாட்டில்   நடைபெற்றது.

புதுக்கோட்டை கிளைத் தலைவர்  டாக்டர் சுவாமிநாதன்   தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளைத் தலைவர் டாக்டர் பழனிச்சாமி கலந்து கொண்டு இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த மருத்துவர்கள் டாக்டர் சுப்புராமன், டாக்டர்சீனியப்பன்,  டாக்ட ர்சுப்பிரமணியன், டாக்டர் இராஜாராம், டாக்டர் ரவிக்குமார், டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர் இராமநாதன், டாக்டர் கருப்பையா,டாக்டர் எழிலரசன், டாக்டர் ஜெயலட்சுமி, டாக்டர் சாரதாமணி ஆகியோருக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது  வழங்கி பேசினார்.

சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் வை .முத்துராஜா  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிதாக சங்கத்தில் இணைந்துள்ள மருத்துவர்கள் ஹரிராம், அரவிந்த், விக்னேஷ், பிரினா, வீனஸ்   ஆகியோரை  கௌரவித்தும்  சிறுவர்களின் பரதநாட்டியம் ,நடனம்  இசை  நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து நற்சான்றும் வழங்கினார்.

இதில்,  கிழக்கு மண்டல துணை தலைவர் டாக்டர் சிங்காரவேலு , டாக்டர் சலீம் , டாக்டர் ராமமூர்த்தி ,டாக்டர் வெண்ணிலா, டாக்டர் நவரத்தினசாமி  ,புதுக்கோட்டை கம்பன் கழக கூடுதல் செயலாளர் ச.பாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக கிளைச் செயலாளர் முகமது சுல்தான்  வரவேற்றார்.  மாமல்லன் ஐஏஎஸ் அகாடமி செந்தில்  விழாவை தொகுத்து வழங்கினார்.    நிறைவாக நிதி செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top