தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கலை அறிவியல் கல்லூரி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் மாணவர் பேச்சுப் போட்டிகள்,கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் (24.11.2023) நடைபெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்புகள்பற்றி மாணவ, மாணவிகள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.பின்னர், பட்டுக்கோட்டை கரம்பையம் மீனாட்சி சுந்தரசேகரன் மகளிர் கலை கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்ற விழாக்களில் மாணவ, மாணவிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்புகள் பற்றியும் சட்டமன்ற நாயகர்கலைஞர் என்ற தலைப்பிலும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
இவ்விழாக்களில் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி தமிழக அரசு தலைமைக் கொறடா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 100பள்ளிகளிலும், 100 கல்லூரிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட 12 குழுக்களில், சபாநாயகர் தலைமையிலான சட்டப்பேரவை குழுவும் ஒன்று. இக்குழுவின் சார்பில் நடத்தப்படுகிற இவ்விழா மிக எழுச்சியாக அமைந்துள்ளது.
மாணவ-மாணவிகளின் நெஞ்சங்களில் தலைவர் கலைஞர் போற்றப்படுகிறார் என்பதைகாண்கிற போது மிகவும் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தலைவர் கலைஞர் ஒரு சகாப்தம். அவர் வாழும் வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கலைஞர்புகழை என்றென்றும் போற்றுவோம் என தமிழக அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் பேசினார்.
இவ்விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு),கா.அண்ணாதுரை, (பட்டுக்கோட்டை) டி.கே.ஜி.நீலமேகம், (தஞ்சாவூர்), என். அசோக்குமார்(பேராவூரணி), தஞ்சாவூர்மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலாளர் திரு.என். ரவிச்சந்திரன், இணைச் செயலாளர்
செ.பாண்டியன், துணைச் செயலாளர்கள் அமுதவல்லி சுமதி, வருவாய் கோட்டாட்சியர்கள்இலக்கியா (தஞ்சாவூர்) அக்பர் அலி (பட்டுக்கோட்டை), பாரத கலை கல்லூரி தாளாளர் புனிதா கணேசன், மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரிஇயக்குநர் ஷீலா, பட்டுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் .சண்முகப்பிரியா செந்தில்குமார்.கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திரு.தனராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.