Close
நவம்பர் 24, 2024 2:11 காலை

பூதலூர் தாலுகாவில் பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் தொகை வழங்கப்படும்

தஞ்சாவூர்

பூதலூரில் நடைபெற்ற வருவாய்த்துறை, வேளாண்துறை விவசாயிகள் பேச்சுவார்த்தை

பூதலூர் தாலுகாவில் பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட 28 கிராம விவசாயிகளின் வங்கி கணக்கில் இம்மாதத்த்திற்குள் தொகை முழுவதும் வரவு வைக்கப்படும் என பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் வேளாண்துறை அதிகாரிகள்  உறுதியளித்தனர்.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து பயிர் செய்ய இயலாமையாலும், விவசாயம் பொய்த்து போனதாலும் பாதிப்புக்குள்ளான பூதலூர் தாலுகாவின் 28 கிராமங்களில் காப்பீடு செய்த விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்னும் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படாததைக் கண்டித்தும், இன்சூரன்ஸ் ஆய்வில் விடுபட்ட கிராமங்களை இணைக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எதிர்வரும் 13-02-2024 அன்று செங்கிப்பட்டி வேளாண்துறை அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்தது.

இந்நிலையில் பூதலூர் வட்டாட்சியர் மரியம் ஜோசப்  தலைமையில்  08-02-2024 வியாழக்கிழமை  அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் கவிதா(ப.கா). ,பூதலூர் வேளாண் உதவி இயக்குனர் இராதா, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் நிர்மலா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, துணை செயலாளர் கோ.சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இரா.இராமச்சந்தி ரன், செயலாளர் சோ.பாஸ்கர், ஒன்றிய செயலளர் இரா.முகில் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேர்வான 28 கிராமங்களில் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் இன்றிலிருந்து இம்மாத இறுதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமெனவும்,

முழுவதும் விடுபட்ட செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப் பட்டி தெற்கு, பாளையப்பட்டி வடக்கு, புதுக்குடி தென்பாதி, செல்லப்பன்பேட்டை, மருதக்குடி ஆகிய கிராமங்களில் 25 விழுக்காட்டிற்கும் மேல் சாகுபடி செய்யப்பட்டதாக நிர்வாக தரப்பில் கொடுத்த தகவல்களை விவசாயிகள் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்ததால், மேற்படி கிராமங்களுக்கும் இழப்பீடு கிடைத்திட உடனடியாக மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஏற்று காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top