Close
நவம்பர் 22, 2024 7:17 காலை

தஞ்சையில் பொது நூலகத்துறை – வாசகர் வட்டம் சார்பில் 56 -ஆவது தேசிய நூலக வார விழா

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 தஞ்சாவூர்  மாவட்ட  மைய நூலகத்தில் பொது நூலகத் துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 56 -வது தேசிய நூலக வார விழா மகிழ்ச்சித் திருவிழா மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் திருக்குறள் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு, நூல்களை வெளியிட்டு, மூத்ததமிழறிஞர்கள் 10 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் நூலகங்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை செயல் படுத்தி வருகிறார்.

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்தை அமைத்து இளைய தலைமுறைக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தி வருகிறார். மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்திட  இது போன்ற நூலகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைமேயர் அஞ்சுகம்  பூபதி, மாவட்ட நூலக அலுவலர்  பா முத்து, வாசகர் வட்டத் தலைவர்  மா.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top