Close
நவம்பர் 23, 2024 10:04 காலை

புத்தகம் அறிவோம்.. இந்திய அரசியலமைப்பின் வரலாறும், விடுதலை இயக்க வரலாறும்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

அரசியலமைப்புச் சட்டம் உயர்வாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பு மோசமாகி விடும்.

“மோசமான அரசியலமைப்பு செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் மோசமான அரசியலும் நல்லதாகி விடும். -டாக்டர் B.R. அம்பேத்கர்(பக் 267).

“மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் திறமை ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.”நாட்டு நலனைப் பலி கொடுத்து விடாத தெளிந்த நோக்கமும், வலுவான எண்ணமும் கொண்டவர்களே நமக்குத் தேவை. அவர்களை மட்டுமே தேர்தல்களின் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.- டாக்டர் ராஜேந்தி 3 பிரசாத்(பக்.267).

அடிப்படை கடமைகள்…

1.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், அதன் குறிக்கோள்களையும் மதித்தல்.
2.தேசியக்கொடிக்கும், தேசிய கீதத்திற்கும் மரியாதை செய்தல்.
3.விடுதலைப் போராட்டத்தின் போது போற்றப்பட்ட குறிக்கோள்களைப் பின்பற்றல்.
4.இந்திய இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை, நிலைநிறுத்தல்.
5. சமய, மொழி, சாதி, பிராந்திய பற்று கடந்து மக்களிடையே சகோதர உணர்வை உருவாக்கல்.
6. பெண்களைத் தாழ்வுபடுத்தும் பழக்கத்தை விட்டொழித்தல்.
7. இந்திய பண்முகக் கலாச்சாரத்தைப் பேணிக்காத்தல்.
8. மக்களிடையே அறிவியல் மனப்பான்மை, மனிதாபிமானம், ஆராயும் ஆற்றல், சீர்திருத்த எண்ணம் ஆகியவற்றை வளர்த்தல்.
9.வன்முறையைத் தவிர்த்து பொதுச்சொத்துகளைப் பாதுகாத்தல்.
10.அனைத்துறைகளிலும் தனியாகவும், சேர்ந்தும் சாதனை படைத்தல்.
11. 6- லிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பளித்தல்(பக். 283).

இந்தியாவின் 75 வது குடியரசு தினம் இன்று. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளையே நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். எல்லா சட்டங்களுக்கும் மேலான “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ”  அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், செய்யச் சொல்லியுள்ள கடமைகளையும் அறிந்து கொள்ள, அனைவரும் வாசிக்க வேண்டும். உண்மையில் இந்தியாவின் ஒற்றுமை பாதுகாக்கப்படு வதற்கும், நம் அரசியல்வாதிகள் பெருமளவில் அத்துமீறாமல் இருப்பதற்கும் நம் அரசியலமைப்புச் சட்டமே காரணம்.

உலகிலேயே சிறிய அரசியலமைச் சட்டம் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடையது. நீண்டது நம்முடையது. அங்கே ஜெப்பர்சன் – இப்போது எல்லா நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம் We The People … ( இந்திய மக்களாகிய நாம்..) அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்.இங்கே அம்பேத்கார். (நம் ஆளுனர் வேறு யாரையும் சொன்னாலும் சொல்லலாம்)

“இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும்விடுதலை இயக்க வரலாறும் “நூல் தமிழில் அரசியலமைப்பு தொடர்பாக எழுதப்பட்டுள்ள நூல்களில் குறிப்பிடத்தக்கது. மூன்று முக்கிய அம்சங்கள் இதில் உள்ளது. ஒன்று, 1773 வாரன் ஹேஸ்டிங்ஸ் கொண்டு வந்த ஒழுங்கு முறைச்சட்டம் தொடங்கி 1935 ஆம் ஆண்டு இந்தியச் சட்டம் வரை, ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துச் சட்டங்களையும் தெளிவாகச் சொல்கிறது

இரண்டாவது இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறு. மூன்றாவது இந்திய அரசியலமைச் சட்டம். இம் மூன்றையும் ஒரு சேர இதில் வாசிக்கலாம். ஆசிரியர்கள் இருவருமே வரலாற்றுப்போராசிரியர்கள்.

போட்டித் தேர்வுகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில், அதற்கு இந்த நூல் மிகவும் பயன்படும். சென்னை வானதி பதிப்பகம், வெளியீடு.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top