Close
மே 10, 2024 6:13 மணி

புத்தகம் அறிவோம்… ரூசோ

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- ரூசோ

ரூசோ. “மனிதன் சுதந்திரமுள்ளவனாகவே பிறக்கிறான். ஆனால் பிறகு எங்கேங்கும் (அடிமைத்தலையில்)கட்டுண்டு கிடக்கிறான். “இந்த வாசகம், இரண்டு புரட்சிகளுக்கு -1776, அமெரிக்க சுதந்திரப் போர், 1789 பிரெஞ்சுப் புரட்சி -காரணமாக இருந்த, உலக வரலாற்றை மாற்றியமைத்த புத்தகங்களின் வரிசையில் முதல் நூலகக் கருதப்படுகிற, “சமுதாயஒப்பந்த “த்தின் (Social Contract) தொடக்க வாசகம்.

பிரெஞ்சுப் புரட்சி உலகிற்கு தந்த கொடை, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,(Liberty, Equality Fraternity) என்ற மூன்று வார்த்தைகள். உலகில் இந்த மூன்று வார்த்தைகள் இல்லாத அரசியலமைப்புச் சட்டங்கள் இல்லை. இவை யாவற்றிற்கும் சொந்தக்காரர் ரூசோ என்றழைக்கப்படுகிற ‘ ரூசோ’.(28 – 6 – 1712 – 2 – 7 – 1778) அவருடைய வாழ்க்கை வரலாறு தான் இந்த, வே.சாமிநாத சர்மா எழுதியிருக்கும் ” ரூசோ.”

ரூசோ வாழ்ந்த காலத்தில் அவருக்கு பெருமையில்லை. அவருடைய நூல்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. ஆனால் பிற்காலத்தில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின், அவருடைய நூலை படிப்பது கெளரவமாக கருதப்பட்டது. சாதாரணமாக அவர் விரும்பிய இடத்தில் புதைக்கப்பட்டிருந்த ரூசோவின் பூத உடல், பிரெஞ்சுப் புரட்சியின் போது, தோண்டி எடுக்கப்பட்டு, எந்த பாரிஸ் நகரில் அவருடைய சமுதாய ஒப்பந்தம் எரிக்கப்பட்டதோ, அந்த நகரில் ஆடம்பர ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு’ பெரிய மனிதர்கள் ‘ புதைக்கப்படும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சர்மா, ரூசோவின் துயர் நிறைந்த வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல அவர் எழுதிய நூல்களின் (சமுதாய ஒப்பந்தம் – அரசியல் நூல், எமிலி அல்லது கல்வி நூல்) சாரத்தையும் நமக்கு பிழிந்து தந்திருக்கிறார். அவரின் ஒழுங்கு நிறைந்தஎளிய வாழ்க்கை, அவரிடமிருந்த உயரிய குணங்கள் யாவற்றையும் சித்திரமாக்கி, நமக்கு வழங்கியிருக்கிறார் சர்மா.சமுதாய ஒப்பந்தம் ஒரு அமர காவியம்.ரூசோவின் வாழ்க்கை அமரத்துவம் பெற்றது.சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம். வெளியீடு-கலைஞன் பதிப்பகம், சென்னை. விலை- ரூ.30.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top