Close
ஜூன் 23, 2024 7:56 மணி

புத்தகம் அறிவோம்…உவேசா.. என் சரித்திரம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- என் சரித்திரம்

ஐயர் இல்லையேல் தமிழில்லை, தமிழில்லையேல் ஐயர் இல்லை’ – ஒரு சொல் வழக்கு உண்டு.

“அவர் வாழ்ந்த காலம் சுதந்திர போராட்டம் பெருமளவில் நடந்த கால கட்டமாகும். அவர் கண்களுக்கு முன்னே பல கிளர்ச்சிகள் நடத்தன. அந்தச் செய்திகளை பத்திரிக்கை யிலும் படித்திருப்பார். ஆனால் அதைப்பற்றி ஒருவரி கூட எழுதியதில்லை. அவரோடு வாழ்ந்த மனைவி யைப் பற்றி ஓரிடத்தில் தான் மதுராம்பிகை என்று பெயர் குறிப்பிடு கிறார்(பக். 75.)

“உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம் என்னும் சுய சரித்திரம் அவருக்கானது. எதைக் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதைச் சுயசரிதம் எழுதுகிறவர்களே தீர்மானிக்கிறார்கள்.

“உ.வே.சாமிநாதையர் சுயசரிதமான என் சரித்திரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்களின் கலாசார சமூக வாழ்க்கையை துல்லியமாக அறிந்து கொள்ளத் தக்க ஆவணமாக இருக்கிறது. அதன் காரணமாகவே முக்கியத்துவம் பெறுகிறது.(பக்.76).

சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள ‘தமிழில் சுயசரிதங்கள்’ – தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி – நூலில் .இந்த தொகுப்பில் உள்ள 12 சுயசரிதங்களில் உ.வே.சாவின் என் சரித்திரமும் ஒன்று.

உ.வே.சா என்றழைக்கப்படும் உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் சாமிநாதையரின் (பிப்.19, 1855 – ஏப்ரல் 28 1942) பிறந்தநாள்- பிப். 19.

என் சரித்திரம்  ஆனந்தவிகடன்’ இதழில், கல்கியின் வேண்டுகோளுக்கிணங்க, 1940 ல் தொடராக, 122 அத்தியாயங்கள், வெளிவந்து உ.வே.சா மறைவிற்குப் பின் 1950 ல் நூலாக வெளியிடப்பட்டது.

பழந்தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்த வரலாற்றை, அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை , பட்ட சிரமங்கள் யாவற்றையும் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் என் சரித்திரத்தில் உ.வே.சா. இது ஒரு நல்ல பயண இலக்கியம் கூட.என் சரித்திரம், தமிழ் மொழியின் , பண்பாட்டின், கலாசாரத்தின் சின்னம்.

வெளியீடு-டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம்
சென்னை. ரூ 150/- (1977-ல்).

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top