மார்ச், 8, சர்வதேச மகளிர் தினம்.சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர்”கிளாரா ஜெட்கின் ” என்ற ஜெர்மன் நாட்டு பெண்மணி. மார்க்சிய செயல்பாட்டாளரான இவர், 1908 -ஆம் ஆண்டு ஜெர்மனியில் கூடிய உலக சோஸலிச காங்கிரசில், “சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் உழைப்பு உற்பத்தி திறன் ஆகியவற்றை யாரும் பொருட்படுத்துவதில்லை. அந்தப் பங்களிப்பை நல்கும் மகளிரைக் கௌரவிக்க வேண்டும். அவர்களுடைய பங்களிப்பு இன்றியமை யாததாக இருந்தும் கணக்கில் கொள்ளப்படாமல் இருப்பது அநீதி ” என்று முழங்கி னார். இதுவே இந்த தினம் கொண்டாடப்படுவதற்கான தொடக்கப் புள்ளி.இன்றைய தினத்தில் “கிளாராவிற்கு” நமது வீர வணக்கங்கள்.
வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி – 2.
பேராசிரியர் பானுமதி தர்மராஜன், ‘புதுகை தென்றல்’ மாத இதழின் ஆசிரியர் புதுகை தர்மராஜன் அவர்களின் துணைவியார், சென்னை, மாநிலக் கல்லூரி உள்பட பல அரசுக்கல்லூரிரிகளில் வரலாற்றுப் பேராசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் புதுகைத் தென்றல் மாத இதழில் “வரலாறு படைத்த வைர மங்கையர் ” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
இந்த நூலில் 16 மிகச் சிறந்த பெண் ஆளுமைகளின் சித்திரம் உள்ளது.பெண்களின் வாக்குரிமைகளுக்காக போராடிய , சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஆளுனராகப் பணியாற்றி, ‘பாரத கோகிலம்’ என்று காந்தியால் அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு, ‘தென்னாட்டு ஜான்சி ராணி ‘என்றழைக்கப்படும் கடலூர் அஞ்சலை அம்மாள்,டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் தங்கையும், சென்னை இராணி மேரிக் கல்லூரி யின் முதல் இந்திய முதல் வருமான நல்லமுத்து இராமமூர்த்தி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதலில் முனைவர் பெற்ற டாக்டர் காடம்பி மீனாட்சி, நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இந்திய சுதந்திரத்திரத்திற்காகப் போராடிய கேப்டன் லட்சுமி,
மற்றும்
அம்மு சுவாமிநாதன்,
கோதாவரி பாருலேகர்,
துர்காதேவி,
துர்காபாய் தேஷ்முக்,
ந.பத்மாசினி அம்மையார்,
நிலாம்பிகை அம்மையார்,
புஷ்பலதா தாஸ்,
மதுரை கே.பி.ஜானகி அம்மாள்,
பத்மாவதி ஆஷர், .
மணலூர் மணியம்மாள்,
இரமணி நல்லதம்பி – அனைவரின் வாழ்வும், செய்த செயற்கரிய சேவையும் சொற்சித்திரமாக்கப்பட்டுள்ளது இந்த நூலில் .பெண்கள் வாசிக்க வேண்டிய மிகச்சிறந்த வரலாற்று ஆவணம். புதுகைத் தென்றல் வெளியீடு,சென்னை- 600026. செல்-9841042949. விலை-ரூ.150.
#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#