Close
நவம்பர் 22, 2024 12:34 காலை

ஈரோட்டில் ஃபேட்டியா தொழில், வீட்டு உபயோக கண்காட்சி தொடக்கம்..

ஈரோடு

ஈரோட்டில் ஃபேட்டியா தொழில், வீட்டு உபயோக கண்காட்சி/ை தொடக்கி வைத்த ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர்

ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பில் 170 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர்  தொடக்கி வைத்தனர்.

ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள பரிமளம் மகாலில் மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபேட்டியா) வெள்ளி விழா ஆண்டையொட்டி ‘ஃபேட்டியா பேர்-2023’ என்ற தலைப்பில் தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மொத்தம் 170 அரங்குகள் அமைக்கப்பட்டு வேளாண் உபகரணங்கள், சூரியஒளியில் (சோலார்) இயங்கக் கூடிய ஏ.சி, மின் உபகரணங்கள், பேட்டரி வாகனங்கள், டிராக்டர் வாகனங்கள், ஜவுளி மற்றும் தங்கம், வெள்ளி நகைகளின் கண்காட்சியினை தொடங்கி வைத்து நேரில் பார்வை யிட்டனர்.

கண்காட்சி அரங்கில் ஈரோடு சுதா மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் தான முகாம், வேலை வாய்ப்பு முகாம் அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.  தொடா்ந்து, ஃபேட்டியா பேர்-2023 -ன் கண்காட்சி மலரை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

ஈரோடு
ஃபேட்டியா பேர்-2023ன் கண்காட்சி மலரை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில், எம்எஸ்எம்இ இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி, என்எஸ்ஐசி மண்டல பொதுமேலாளர் சரவணகுமார், மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் மணிகண்டன், ஃபேட்டியா தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம்,

ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி, கண்காட்சியின் தலைவர் என்.டி.மூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பி.சின்னச்சாமி, முன்னாள் தலைவர் ஜெகதீசன்,

துணை தலைவர்கள் தனபாலன், சந்திரசேரன், வி.ராஜமாணிக்கம், சண்முகசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் துரைசாமி, கண்காட்சியின் துணைத்தலைவர் ஜிப்ரி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி குறித்து கண்காட்சியின் தலைவர் என்.டி.மூர்த்தி கூறியதாவது:

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 74 சங்கங்கள் சார்பில் வெள்ளி விழா ஆண்டினையொட்டி ‘ஃபேட்டியா ஃபேர்-2023’ என்ற தலைப்பில் தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவங்கப்பட்டு, வரும் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

ஈரோடு

இந்த கண்காட்சியில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க, வெள்ளி நகைகள், வேளாண்மை பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உணவு திருவிழாவும் நடக்கிறது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு இன்னிசை, கலை நிகழ்ச்சிகள், மேஜிக் காட்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. சின்னத்திரையில் புகழ் பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் கலை மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

சிறுவர்-சிறுமிகளுக்காக மாறுவேடம், கராத்தே, கவிதை, நடனம், செஸ், சிலம்பம், ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல், யோகா உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு ஃபேட்டியா சார்பில் 2,500க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த Investigation -க்காண நேரில் வருகை தந்து பயன்பெறலாம் என்று தெரிவித்தார்.

# செய்தி-ஈரோடு மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top