Close
ஏப்ரல் 4, 2025 10:57 காலை

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்: ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

ஈரோடு

கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: பல்லடத்தை சேர்ந்த நேச பிரபு என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நியூஸ் 7 செய்தி சேனலில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தன்னை ‘நோட்டமிட்டு வருவதாகவும் எனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக போலீசில் புகார் கூறி வந்தார்.

ஆனால் இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வந்த நிலையில் நேற்று தனது வீட்டின் அருகில் செய்தியாளர் நேசப்பிரபு மர்ம நபர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

எனவே நேச பிரபு மீது, கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மேலும் இந்த சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை யினர் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top