Close
நவம்பர் 22, 2024 12:48 மணி

துபையிலிருந்து சென்னை வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுக்கோட்டை

துபையிலிருந்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது

துபையிலிருந்து சென்னைக்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி வருகிறது.

இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக் கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 பயணிகள் சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்துள்ளனர்.

அவர்களுக்கு நேற்று ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப் பட்டத்தில், 36 வயது பெண்ணுக்கும், ஒரு குழந்தை உட்பட 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் முடிவுகள் 4 அல்லது 5 நாட்களில் கிடைக்கும். அதன் பின்னரே அவர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கண்டறிய முடியம் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் துபையில் இருந்து சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 பேருக்கும் புதிய வகை கொரோனாவா அல்லது வேறு வகையா என கண்டறிய மாதிரிகளை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள் ளனர்.  பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறை களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top