கஞ்சா கடத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் பகுதியில் காரில் 160 கிலோ கஞ்சா கடத்திச் சென்றவருக்கு, 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங் கள் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நூர்இப்ராஹிம் மகன் நைனார் சித்திக் (43). காரில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், இவரை கடந்த 2017 -ஆம் ஆண்டு டிசம்பர் 11 -ஆம் தேதி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவரது காரில் இருந்து 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி அ.கி. பாபுலால் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளி நைனார் சித்திக்குக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.