பொன்னமராவதி ஒன்றியம் சித்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது..
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கூடலூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்தப்பட்டது.
வட்டாரக் கல்வி அலுவலர் இராமதிலகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு நல்ல நாகு ஆகியோர் ஆலோசனையின்படி, சித்தூர் கிராமத்தில் தொடங்கிய மாணவர்களுக்கான ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் தங்கமணி தலைமை வகித்தார்.
முன்பாக ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவினை இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் கல்பனா தேவி, பவிதா, இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
மேலும் இப்பயிற்சியில் மாணவச் செல்வங்களுக்குஅறிவியல் தொடர்பான எளிய அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் அற்புதங்கள், கணித விளையாட்டுகள், சமையல் அறையில் அறிவியல், விளையாட்டுகள்.
கதைகள், கற்பனை திறன் மற்றும் செயல்பாட்டுத் திறன், உள்ளூர் வரைபடம் வரைதல் போன்ற தலைப்புகளில் பயிற்சியினை வானவில் மன்ற கருத்தாளர்கள் காவியா, அப்ரீன்பானு, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கோகிலா, ரம்யா,சங்கீதா ஆகியோர் பயிற்சியின் முக்கியத்துவத்தினை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
இப்பயிற்சியில்இதில் அறிவியல் ஆர்வம் கொண்ட இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.