Close
செப்டம்பர் 20, 2024 3:36 காலை

தஞ்சை மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ களில் மாணவர் சேர்க்கை: ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்திலுள்ள அரசு தனியார் ஐடிஐ களில் மாணவர் சேர்க்கை

2023-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், திருவையாறு. ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக 07.06.2023 மாலை 5. மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் www.sbilltrainine.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவிமையங்கள் (Facilitation Centre ) அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாற்றுசான்றிதழ் (TC), மதிப்பெண் சான்றிதழ் (Marksheet 8h/10h/12th ) .

சாதிசான்றிதழ் (Community Certificate), முன்னுரிமை சான்றிதழ் (மாற்றுதிறனாளிகள்/விதவை/முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள்/மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் முதன்மையானவர்/ தாய் தந்தை இழந்த ஆதரவற்ற மாணவர்கள்), புகைப்படம் – 2 (Passport Size Photo), ஆதார் கார்டு (Aadhar Card) ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.

ஆகஸ்ட்-2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி,10 -ஆம் வகுப்பு தேர்ச்சி. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம்.

முன்னாள் இராணுவத்தினருக்கு 14 முதல் 45 வயது வரை மாற்று திறனாளிகளுக்க குறைந்த பட்ச வயது 14 முதல் உட்ச வரம்பு வயது இல்லை. 2020-2021 -ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ஆம் வகுப்பு, மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய தொழில் பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபட கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ750/- வழங்கப்படும்.

அரசுபள்ளியில் பயின்று மாணவிகளுக்கு மூவலூர் இராமா மிர்தம் உயர்கல்வி திட்டத்தின்கீழ் ரூ.1000/- மாதாந்திர கூடுதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண்:9994043023 / 7708709988 / 9840950504 / 9442220049.  என தஞ்சை மாவட்ட ஆ்ட்சியர்  தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top